Skip to main content
ஆடுபுலி ஆட்டம்,கில்லி தண்டா, பம்பரம், தாயம், பல்லாங்குழி இதெல்லாம் நியாபகம் இருக்கின்றனவா??
தமிழன் மறந்த அல்லது மறக்கடிக்கப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது நமது பண்டைய விளையாட்டுக்கள்.சிறியதும் பெரியதுமாய் குச்சிகளை வைத்துக்கொண்டு கிட்டிப்புல் யாரும் விளையாடுவதில்லை. காரணம் எல்லோரும் இப்போது  கணினியில் விளையாட அமர்ந்து விடுகின்றனர்.
தாயம், பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம் என பெண் குழந்தைகள் கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் அழிந்து வருகின்றன.இந்த விளையாட்டுக்களைப் பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் தற்கால குழந்தைகளுக்கும் தெரியும் வகையில் இந்த பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் கொண்டு வரக்கூடிய ஒரு புதிய முயற்சி.
பரமபதம்: 
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை படம் காட்டி போதித்தது பரமபதம், தடங்கல்களை தாண்டி முன் செல்லும் துணிவும் தந்தது.




தாயம்:

கணக்கியல், ஒருங்கிணைப்பு, மாற்று சிந்தனை, விடா முயற்சி மட்டுமல்லாமல்  விதியைமதியால் வெல்லலாம் என உரக்க சொல்லிக்கொடுத்தது  தாயம்.




ஆடு புலி ஆட்டம்:
முயற்சித்தால் வலியோரை எளியோர் வெல்ல முடியும் என நிரூபித்து காட்டியது ஆடு புலி ஆட்டம்.




கில்லி தண்டா: 
 கூட்டல், கழித்தல், பெருக்கல் , வகுத்தல் விளையாட்டை சொல்லி கொடுத்த கிட்டிப்புள், கூட்டு முயற்சி, ஒருங்கிணைப்பையும் கற்று கொடுத்தது.




இதைப்போல இன்னும் பல இழந்து இன்று நமது மகனையும் , மகளையும் குரங்கு துரத்த மொபைல் போனை கையில் கொடுக்கிறோம்.
வாழ்வை சிறந்த முறையில் வாழ தேவையான அத்துணை தகுதிகளையும் கற்றுக்கொண்டு மனமகிழ்வோடு விளையாடிய விளையாட்டுகளை மறந்த இந்த தலைமுறை இன்று மொபைல் போனில் தீவிரமாக ஊற்று நோக்கியபடி வளைந்து வளைந்து ஓடி குரங்கிடமிருந்து தப்பிப்பதில் பெருமிதம் கொள்வது தான் சாதனையா??? இல்லை  குருவிகளை கவனில் வைத்து பன்றி கோட்டைகளை மணிக்கணக்கில் இடித்துக்கொண்டே இருப்பதுதான் பெருமையா??? தனித்து தனித்து மொபைல் போனை முறைத்துக்கொண்டே திரியும் இந்த தலைமுறையும் , இதை பார்த்து வளரப்போகும் அதன் அடுத்த தலைமுறையையும் நினைத்தாலே மனம் கனக்கிறது.
மொபைலை முறைத்து முறைத்து கண்கள் சிவந்து , சிந்தை பிறழ்ந்து போதும். நாம் நமது தலைமுறைக்கு தரும் மிக சிறந்த பரிசும் பாடமும் நமது பண்டைய விளையாட்டுகள் தவிர்த்து வேறேதும் இல்லை.
மனதிற்கு உற்சாகம் :கணினியில் விளையாட்டுகள் விளையாடுவதைவிட இந்த பாரம்பரிய விளையாட்டுகளில்  தங்களுக்கு மன,உடல் ரீதியாக உற்சாகம் அளிப்பதாக இன்றய  மாணவ.மாணவிகள் தங்கள்  கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
மீட்டெடுக்கும் ஒரு முயற்சி:
அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள வலைத்தளம் www.nattumarunthukadai.com என்பதில் பெருமிதம் கொண்டுள்ளோம்.

Comments

  1. It is wonderful. we have know about our traditional games and we have to teach our children also. keep it up.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Benefits of Tamil Traditional Walker over Modern Plastic walkers

Tamil Traditional Games Competition to Modern Kids

கரு மஞ்சள் /  Black Turmeric பூஜை அறை, பணப்பெட்டி போன்றவற்றில் வைக்க தனவரவை பன்மடங்கு பெருக்கும் என நம்பிக்கை. கரு மஞ்சள் வீட்டில் இருக்க திருஷ்டி போக்கி நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது சித்தர்கள் வாக்கு. 🙌 🙌 மிக அதிக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க நமது வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 🌱 இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உண்டு. 🛒 தேவைக்கு-  Buy Karu Manjal Online Click Here கரு மஞ்சள் பற்றி யூ டூப் வீடியோ பதிவை காண:-  https://www.youtube.com/watch?v=enAeuliAGkU