Skip to main content
ஆடுபுலி ஆட்டம்  available Now @ www.nattumarunthukadai.com 


ஆட்டை பிரியாணிக்கு மட்டும் பயன்படுத்திவந்த உலக சமுதாயத்திற்கு முன் ஆட்டைக் கொண்டு ஆட்டமும் ஆடிக்காட்டியது  நாம் தான். அவை நமக்கு சொல்லி கொடுத்ததும் பல !!!


 திண்ணைகளெல்லாம் விற்றுத் தின்றுவிட்டப் பிறகு அப்பார்ட்மெண்டில் அஞ்சாவது மடியில் திண்ணை அளவுள்ள வீடுகளில் குடிபுகுந்து விட்டு, இப்போது குழந்தைகளின் கைகளில் மொபைல் போன்-ஐ கொடுத்துவிட்டு நாம் தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுவதினால் வரும் விபரீதங்களும் பல !!!!


ஆடு புலி ஆட்டம் : கூர்மையான சிந்தனையும், நன்கு யோசிக்கும் திறனுமே வெற்றியின் அடையாளம்

சாதுர்யமும் சமயோசிதமும் கொண்டு விளையாடப்படுவதால் வயது ஒரு தடையில்லை. தமிழகம் மட்டுமின்றி அவரவர் மொழியில் ஆட்டுக்கும் புலிக்கும் பெயர்வைத்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளையாடியுள்ளனர். 



வங்கத்தில் பாக் பண்டி.

 பஞ்சாப்பில் ஷிர் பகர்.

 நேப்பலில் பாக் சால்.

 மலேசியாவில் மெயின் தபல் எம்பத். 


தமிழக ஆடுபுலி வடிவத்தில் பதினைந்து  ஆடுகளும் முன்று புலிகளும் கொண்டுள்ளது. தனக்கு அருகில் உள்ள ஆட்டை புலி வெட்டித் தாண்டும். வெட்டுப்படாதவாறு ஆடுகளை வைத்து நகர்த்தி புலியை சிறை பிடிக்க வேண்டும். ஆடுகள் எல்லாம் வெட்டப்பட்டால் புலி வென்றதாககும். புலியை நகரவிடாமல் மறித்தால் ஆடு வென்றதாகும். ஆட்டத்தின் தொடக்கத்தில் புலி களத்தில் இறங்கும் , ஒவ்வொரு ஆடாக நீங்கள் விரும்பிய சந்திகளில் களமிறக்கலாம். ஆடு,புலி என மாறி காய்கள் நகர்த்த வேண்டும்.


ஆடுபுலி ஆட்டத்தின் ரூல்ஸ் என்று கேட்டால்,

1) புலியும் ஆடும் நான்கு புறத்திலும் ஒரு கட்டம் தான் நகரும். ஆனால் புலி தனக்கு அருகில் ஒரு ஆடும் அதற்கு அடுத்த சந்தி காலியாகவும் இருந்தால் ஆட்டை வெட்டிவிட்டு இரண்டு கட்டம் நகரும்.

2) ஓரங்களில் உள்ள ஆட்டை புலியால் வெட்டமுடியாது காரணம் புலி வெட்ட வேண்டுமானால் புலி-ஆடு-காலிஇடம் என்று வரிசையில் இருந்தால் மட்டுமே வெட்டமுடியும். புலி-ஆடு-ஆடு என்று இருந்தால் புலியால் வெட்டமுடியாது.

3) புலியை மடக்க மிகக் குறைந்த பட்சம் எட்டு ஆடுகளாவது வேண்டும். அதற்கு குறைவான ஆடு களத்தில் இருந்தாலும் ஆடு தோற்றதாகவே கருதப்படும். 11 ஆடுகளுக்குக் கீழ் குறைந்தாலே வெல்வது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

Benefits of Tamil Traditional Walker over Modern Plastic walkers

Tamil Traditional Games Competition to Modern Kids

கரு மஞ்சள் /  Black Turmeric பூஜை அறை, பணப்பெட்டி போன்றவற்றில் வைக்க தனவரவை பன்மடங்கு பெருக்கும் என நம்பிக்கை. கரு மஞ்சள் வீட்டில் இருக்க திருஷ்டி போக்கி நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது சித்தர்கள் வாக்கு. 🙌 🙌 மிக அதிக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க நமது வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 🌱 இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உண்டு. 🛒 தேவைக்கு-  Buy Karu Manjal Online Click Here கரு மஞ்சள் பற்றி யூ டூப் வீடியோ பதிவை காண:-  https://www.youtube.com/watch?v=enAeuliAGkU